யாழில் விபத்து: 10இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதம்!
யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதியதில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி என்பவை சேதமடைந்துள்ளன.
யாழ்.நகர் பகுதியில் இருந்து தீவகம் நோக்கி பயணித்த கார் , பண்ணை சுற்றுவட்ட பகுதியில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து , பண்ணை கடற்கரை பூங்காவிற்கு வந்திருந்தவர்கள் , வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் , 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.
மேலதிக விசாரணை
காரின் ஒரு சில்லின் காற்று திடீரென போனமையால் கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.