கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்! பலத்த காயங்களுடன் வீசிச்சென்ற கும்பல்
கொள்ளுப்பிட்டிய - ஆல்ஃபிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (21) முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத குழு ஒன்று, சடலத்தை அந்த இடத்தில் கொண்டுவந்து போட்டு சென்றதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தில் பல காயங்கள்
உயிரிழந்தவரின் சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், உயிரிழந்தவரின் அடையாளம் அல்லது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து கொள்ளுப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குறித்த சடலத்தை அந்த இடத்திற்கு கொண்டு வந்த நபர்களை அடையாளம் காணும் விசாரணையும் நடைபெற்று வருகின்றது.