தெல்லிப்பழையில் 2.71 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு - பாதுகாப்புப் படையினர் உத்தியோகபூர்வ அறிவிப்பு
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(23.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
2.71 ஏக்கர் காணி ஆவணம் கையளிப்பு
இதன்போது, குறித்த ஆவணத்தை பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க (Col. WMAM Nissanka), யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.

மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் மேஜர் HMDN ஹேரத் (Major HMDN Herath) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.