அனோஜனைக் காப்பாற்றி ஞானசாரரைக் கைவிட்ட அநுர! ஜனாதிபதிக்கு நாமலின் பகிரங்க கேள்வி
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுக்க முடிந்த ஜனாதிபதி அநுரவினால், ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்க முடியவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மையில், அனோஜன் சிவராசா என்ற இளைஞரின் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான தலையீட்டை மேற்கொண்டது.
ஞானசாரருக்கு மன்னிப்பு வேண்டும்
அதன் காரணமாக, இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதிலும், சவுதி அரேபிய அரசாங்கம் அந்த இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு தீர்மானித்தது.

அவ்வாறு, அரசாங்கம் தலையிட்டு மற்றுமொரு நாட்டின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
அப்படியானால், பௌத்த நாடான இலங்கையில் ஞானசார தேரருக்கு எதிராகவும் இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குதவற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும்.
மற்றுமொரு நாட்டின் தலைவரிடம் தலையிடுமாறு கோரிக்கை விடுத்து, அங்குள்ள இளைஞரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி அநுரவினால், தனது நாட்டில் உள்ள ஞானசார தேரர் விவகாரத்திலும் தலையிட முடியும்.
அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறினால், அது வேறு காரணங்களுக்காக அல்ல. அது அரசியல் நோக்கத்திற்காகவே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri