நாட்டின் பொருளாதாரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த எடுத்த முடிவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வட்டி விகித உயர்வின் காரணமாக மக்களின் செலவிடும் திறன் குறைவதோடு, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவை மேலும் கீழிறங்கும் வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தீர்மானத்தால் நாட்டின் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மேலும் சரியக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7% எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் 0.7% வரி வருவாய் மூலம் கிடைத்த பங்களிப்பாகும் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சூழலில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைவதும், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைப்பதும் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளார்.