பாலஸ்தீனிய வீடுகள் முற்றுகை: நெதன்யாகுவுக்கு அமெரிக்கா அழுத்தம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் முற்றுகையிட்டுள்ள சம்பவத்திற்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து கடந்த ஒரு வாரமாகப் பாலஸ்தீனியக் குடும்பங்களைச் சிறைபிடித்துள்ள இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆதரவு
அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியரின் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அமெரிக்கா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

எனினும் வரவிருக்கும் தேர்தலில் தீவிர வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவு தேவை என்பதால் நெதன்யாகு இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.