USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

Donald Trump United States of America Flight
By Shadhu Shanker Aug 14, 2026 06:50 PM GMT
Report

அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.

அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு

அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | Us Faces Morale Crisis Amid Iran War Hormuz

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன. இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.

போர்ச் சூழ்நிலை

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.

USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது. இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | Us Faces Morale Crisis Amid Iran War Hormuz

Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. 2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.

போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.

பென்டகனிடம் பொறுப்புக்கூறல்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | Us Faces Morale Crisis Amid Iran War Hormuz

ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.

கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.

அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | Us Faces Morale Crisis Amid Iran War Hormuz

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை. அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.   

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US