அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை! விசேட சுற்றறிக்கையும் வெளியானது
இலங்கை தொழில்நுட்ப சேவையின் கடமைகளை பிற சேவைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப சேவையில் வெற்றிடங்கள்
இந்த சுற்றறிக்கையை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார (S. Alokabandara) அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நிறுவன தலைவர்கள் இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் கடமைகளைப் பிற சேவைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு ஒப்படைத்துள்ளதாக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாக, அப்பதவிகளின் கடமைகளால் எதிர்பார்க்கப்படும் தரம், பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை தரங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
எனவே, தொழில்நுட்ப சேவையில் வெற்றிடங்கள் இருந்தால், அரசியலமைப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு இணங்க அந்த வெற்றிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய சுற்றறிக்கை குறிப்பிடுகின்றது.