ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பேசிய ட்ரம்ப்,
ஹோர்முஸ் நீரிணை
“ஈரானை தோற்கடித்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.