விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை! நிசாம் காரியப்பர் புகழாரம்
விஜய் போல கிழக்கிலும் ஒரு தளபதி தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் இன்று(5.5.2026) நாடாளுமன்றத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். ஏனெனில், தமிழ்நாட்டிலும் இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வாழ்த்து
இவ்வாறு குறிப்பிட்ட அவர், "எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதிபோல ஓடிக்கொண்டிரு..." என்ற பாடலைப் பாடினார்.

மேலும், தமிழ்நாட்டு மக்கள் இளைய தளபதி விஜயை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, முதலமைச்சராக நியமித்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இன, மத பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்திலும் ஒரு தமிழ் மகன், விஜய் போன்ற ஒரு தளபதி முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam