காலியில் வோர்ன்- முரளி டெஸ்ட் தொடர் கிண்ணம் அறிமுகம்
யுனெஸ்கோ பாரம்பரிய தளமான காலி கோட்டைக்கு அடுத்ததாக அமைந்துள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா (Dhananjaya de Silva) மற்றும் அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நேற்று(28) வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர் கிண்ணத்தை அறிமுகப்படுத்தினர்.
இந்த நிகழ்வு கிரிக்கெட் மற்றும் கலாசாரத்தின் கலவையாக அமைந்திருந்தது.
வோர்ன்- முரளி டெஸ்ட் தொடர்
இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான சேன் வோர்ன்(Shane Warne) மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் திறமைகளையும் அதே நேரத்தில் இலங்கையின் வளமான பாரம்பரியத்தையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் நாக ராக்சா, குருலு ராக்சா, சுரப வல்லிய மற்றும் நாரிலதா உள்ளிட்ட பாரம்பரிய இலங்கை முகமூடிகளின் காட்சிகள் இடம்பெற்றன.
இலங்கையின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மரபுகளின் அடையாளங்களாக இவை அமைந்திருந்தன.
இதேவேளை இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான வோர்ன்- முரளி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று(29) காலி மைதானத்தில் ஆரம்பமாகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
