இந்திய அணியை வீழ்த்தி தொடர் வெற்றியை தடுத்த இங்கிலாந்து
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவது 20-20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணிக்கான தொடர் வெற்றி வாய்ப்பை இங்கிலாந்து அணி தற்காலிகமாக தடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி
ராஜ்கொட்டில் இன்று(28) இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்திய அணி
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்திய அணிசார்பில் ,ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இங்கிலாந்தின் ஜெமி ஓவர்டென் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தப் போட்டி முடிவின் அடிப்படையில் 5 போட்டிகளை கொண்ட 20-20 தொடரில் இந்திய அணி, 2- 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
