காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை மீது கடும் விமர்சனம்

Indian fishermen Sri Lanka Delhi Government Of India Sri Lanka Navy
By Amal Jan 28, 2025 03:48 PM GMT
Report

இலங்கை(Srilanka) கடல் எல்லையில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்தபோது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, புதுடில்லியில்(NewDelhi) உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் இன்று(28) காலை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகமும், இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமரசம்

யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமரசம்

இந்திய அரசு

கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியாகவும், வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை மீது கடும் விமர்சனம் | Indian Fishermen Injured In Lankan Firing

எனவே, இது தொடர்பாக இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்கனவே உள்ள புரிதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை அருகே உள்ள கடலில் இலங்கை கடற்படையுடன் இன்று அதிகாலை நடந்த மோதலின் போது குறைந்தது இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள்; துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள், மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.“

விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம்

விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம்

காயமடைந்த கடற்றொழிலாளர்கள்

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதகர அதிகாரிகள் காயமடைந்த கடற்றொழிலாளர்களை மருத்துவமனையில் சந்தித்துள்ளனர்.

காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை மீது கடும் விமர்சனம் | Indian Fishermen Injured In Lankan Firing

முன்னதாக, இந்திய கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், கடல் எல்லைகளை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் படி, கடற்றொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது, ஒரு இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், ஒரு கடற்படை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது, அந்த அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால், இரண்டு கடற்றொழிலாளர்களின் கால்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US