விரைவாக முக்கிய இராணுவ மாற்றங்களை அநுர செய்வதன் இரகசியம் அம்பலம்
இலங்கை அரசு படைத்துறையினரை பலப்படுத்தி படைத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி தனது அரசை பிராந்திய நாடுகளிடமிருந்தும் உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்தும் தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கின்றது என பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது அநுர அரசை பொறுத்தவரையில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிழல்அரசு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவருகின்றன.
தாங்கள் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றார்கள். இவ்வாறான நிலையில், அரசாங்கத்திற்கு இராணுவத்தை கையெழுடுப்பதை தவிர வேறு வழியில்லை.
எனவேதான் இலங்கையில் அண்மையில் பாதுகாப்புதுறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவந்தார்கள். முப்படைகளின் பிரதானி நீக்கப்பட்டிருந்தார், புலனாய்வு துறை உட்பட சில துறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 3 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
