இது எங்கள் போர் அல்ல: ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பா!
ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு இராணுவ உதவி வழங்க முடியாது என ஐரோப்பிய நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஈரானுடனான மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ள நிலையில், அதனை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளின் உதவியைக் கோரினார்.
இதற்காக ஐரோப்பிய நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோரிக்கை
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், "ஹோர்முஸ் நீரிணையில் தங்கள் நாட்டு வீரர்களை ஆபத்தில் தள்ள யாரும் தயாராக இல்லை" என்று கூறி இக்கோரிக்கையை நிராகரித்தார்.

இதேபோல், ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பேசுகையில், "இது எங்கள் போர் அல்ல, இதை நாங்கள் தொடங்கவும் இல்லை.
சக்திவாய்ந்த அமெரிக்கக் கடற்படையால் முடியாத ஒன்றை, ஐரோப்பாவின் சில போர்க்கப்பல்கள் செய்துவிடும் என்று ட்ரம்ப் எப்படி எதிர்பார்க்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா முன்னறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும், தற்போதைய சூழலில் இந்த மோதலில் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லை என்றும், தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா முன்னறிவிப்பு இன்றித் தொடங்கிய இந்தப் போரில் தங்களை இணைத்துக்கொள்ள ஐரோப்பா விரும்பவில்லை என்பது இந்த முடிவின் மூலம் தெளிவாகியுள்ளது.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri