யாழில் பசு வதைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பசு வதைக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று (12) காலை இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
எதிர்ப்பு போராட்டம்
'காசாவுக்கு ஒரு நீதி இந்துக்களுக்கு இன்னொரு நீதியா', 'நிறைவேற்று நிறைவேற்று பசு வதைத் தடைச் சட்டத்தினை நிறைவேற்று' மற்றும் 'புனித சின்னத்தினை சிதைக்காதீர்', என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவருமாகிய ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
