வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது வெளிநாட்டுக் கையிருப்பின் அடிப்படையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில் மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
அத்துடன், குறித்த பரிந்துரைகளைத் தற்போது மாற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படும் எனக் கணிப்பிட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தை விடவும் அதிகமாகப் பதிவாகும் எனத் தங்களது தரப்பு மதிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |