முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் முறைப்பாடு
பிரிட்டனின் 'Republic' என்ற அமைப்பு, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அவர் அரசு ரீதியான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் முன்னதாக வெளியிட்ட மின்னஞ்சல்களின்படி, 2010இல் ஆண்ட்ரூ, தனது அரசுப் பயணங்கள் (சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்காங்) குறித்த விபரங்களையும், ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு முதலீடுகள் குறித்த இரகசியத் தகவல்களையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
முறைப்பாடு
2001 முதல் 2011 வரை பிரிட்டனின் வர்த்தகத் தூதராக இருந்த ஆண்ட்ரூ, அந்தப் பதவியின் கீழ் ரகசியத்தைக் காக்க வேண்டிய கடமைக்கு உட்பட்டிருந்தார்.

எனினும், அவர் 'அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும் 2008இல் எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட பின்னரே நடந்துள்ளன.
ஆய்வு
தற்போது பொலிஸார் இந்த முறைப்பாட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.

எனினும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.