நாவற்குழி சிங்கள மக்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
நாவற்குழியில் (Navatkuli) இருக்கும் இருபது சிங்கள குடும்பங்களுக்கு அரசாங்கம் எவ்வித வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என கொட்டபிட்டிய ராகுல தேரர் (Kotapitiye Rahula Thero) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர், யுத்தத்தின் பின்னர் நாவற்குழியில் உள்ள கிராமம் ஒன்றில் ஐம்பது சிங்கள குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர் அவர்களில் இப்போது இருபது குடும்பங்கள் தான் இருக்கின்றனர்.
சிங்கள மக்களின் வாழ்வாதாரம்
அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு சிங்கள படசாலை ஒன்று இல்லை.ஏன் நாட்டின் தலைவர்களுக்கு ஒரு சிங்கள பாடசாலை ஒன்றை அமைத்து கொடுக்க முடியாது.
நாவற்குழியில் வசிக்கும் மக்கள் தென்பகுதியில் இருந்து செல்லும் சிங்கள மக்களுக்கு தங்கள் வீடுகளை வழங்கி தங்களின் வாழ்வாதாரங்களை தேடிக் கொண்டனர்.

அதையும் இந்த அரசாங்கத்தின் அரசியல் வாதிகள் நிறுத்தியுள்ளனர்.ஆனால் வேறு ஒரு பிரிவினருக்கு அதை கொடுத்துள்ளனர்.
அரச தலைவர்கள் வடக்குக்கு சென்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசாமல் நாவற்குழியிலுள்ள சிங்கள மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தால் நல்லதல்லவா என குறிப்பிட்டிருந்தார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam