கோட்டாபயவுக்கு சென்ற எழுத்துப்பூர்வ அறிவிப்பு : விரைவில் சிஐடிக்கு..
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்கு வருமாறு சிஐடி அழைத்துள்ளதாக தெரியவருகின்றது.
எழுத்துப்பூர்வ அறிவிப்பு
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கிய விவகாரம் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் குறித்த விசாரணைக்காக இவ்வாறு கோட்டாபய அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது குறித்த எழுத்துப்பூர்வ அறிவிப்பு கடந்த 06ஆம் திகதி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri