பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த சிங்களவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற மூன்று இலங்கையர்கள் தென்னிலங்கையில் வைத்து இன ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட்டதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர்.
தங்காலையில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள உணவகம், உள்நாட்டு மக்களைப் புறக்கணித்து வெள்ளையினத்தவர்களுக்கு மட்டுமே சேவை வழங்குகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த மூன்று இலங்கையர்கள் இந்த உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த காசாளர் அவர்களுக்குச் சேவை வழங்க மறுத்துள்ளார்.
உணவு வழங்க மறுப்பு
தாங்கள் இலங்கையர்கள் என்பதால் தங்களுக்கு உணவு வழங்கப்படமாட்டாது எனவும் வெளிநாட்டினருக்கு மட்டுமே அங்கு அனுமதி எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த காணொளி, இலங்கையின் சில உணவகங்கள், குறிப்பாக முக்கிய சுற்றுலா வலயங்களில், உள்ளூர்வாசிகளை விட வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam