அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கக் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிதி உதவி
புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் தயார் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வழங்கப்படவுள்ள உதவிகளை தொடர்பிலும் அறிவித்துள்ளன.
இதேவேளை ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவும் வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
