ஒரு ஜெர்சி… ஒரு சகாப்தத்தின் அடையாளம்! ரொனால்டோவுக்காக போர்த்துக்கல் எடுத்த முடிவு
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கைக்கு கௌரவம் செலுத்தும் வகையில், போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் 7ஆம் இலக்க ஜெர்சியின் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, டென்மார்க்கிற்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் போட்டியில் இந்தப் புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதிரடி மாற்றம்
ரொனால்டோ ஓய்வுக்குப் பின்னர் போர்த்துக்கல் அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.
சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ, போர்த்துக்கல் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரராகவும், அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
அவர் 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிந்து வந்த 7ஆம் இலக்க ஜெர்சியின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பான இலக்கத்தின் முக்கியத்துவத்தையும், அது பிரதிபலிக்கும் மரபையும் கௌரவிக்கும் மற்றுமொரு முயற்சியாக இது அமைந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரொனால்டோவுடன் என்றும் தொடர்புபட்டிருக்கும் சாதனைகள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் வரலாற்றை மறக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA விதிமுறைகளின்படி, ஒரு அணியால் குறிப்பிட்ட இலக்க ஜெர்சியை நிரந்தரமாக ஓய்வுபெறச் செய்ய முடியாது. இதனால், ரொனால்டோவின் கால்பந்து பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், புதிய 7ஆம் இலக்க வடிவமைப்பில் சிறிய குறுக்குக்கோடு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவுக்கு கௌரவம்
ரொனால்டோ போர்த்துக்கல் அணியிலிருந்து விலகிய பின்னர், டென்மார்க்கிற்கு எதிரான முந்தைய போட்டியில் ரஃபேல் லியாவோ 7ஆம் இலக்க ஜெர்சியை அணிந்திருந்தார்.
எனினும், அந்த இலக்கத்திற்கான நிரந்தர வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 41 வயதான ரொனால்டோ, பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் திகதி சர்வதேச அணியிலிருந்து விலகினார்.
அவர் இறுதியாக செப்டம்பர் 24ஆம் திகதி வேல்ஸ் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில் விளையாடியிருந்தார்.

அப்போட்டியில் போர்த்துக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ரொனால்டோ மாற்று வீரராகக் கூட களமிறக்கப்படாத நிலையில், அடுத்த போட்டியிலும் அவரை ஆரம்ப அணியில் சேர்க்கத் திட்டமில்லை என பயிற்சியாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியிருந்தார். பின்னர், ரொனால்டோ மீண்டும் அணிக்குத் திரும்ப விரும்பினால் அவருக்கு வரவேற்பு இருப்பதாக பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் தெரிவித்திருந்தார்.