நிலத்தடியில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய அறை - சிக்கிய ஆபத்தான பொருள்
மாத்தளையில் நிலத்தடி அறையில் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத கள்ளச்சாராய ஆலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சிறப்பு பொலிஸ் குழு இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இணையத்தின் மூலம் இவை விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய ஆலை
இந்த மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மாத்தளை பிரதான சாலையில் இடிந்து விழுந்த இரண்டு மாடி கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த பெரிய அளவிலான கள்ளச்சாராய ஆலை வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாத்தளை மாவட்டத்தில் பல பகுதிகளில் கைபேசிகள் மூலம் பெறப்பட்ட செய்திகள் வழியாக கள்ளச்சாராயத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
குறித்த இடத்திலிருந்து பத்தாயிரம் லீட்டர் கோடா, எட்டு பெரல் மதுபானம், மதுபானம் காய்ச்சப் பயன்படும் உபகரணங்கள், எரிவாயு அடுப்புகள், எரிவாயுத்தொட்டிகள் மற்றும் பல உபகரணங்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தியபோது, மதுபானத்தைக் கொண்டு செல்வதற்கும் காய்ச்சுவதற்கும் உதவிய மற்றொரு சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.