சஜித் அணியின் ஆதரவுடன் நிறைவேறிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள தனமல்வில பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்ததால் வாக்குகள் சமநிலையில் முடிவடைந்தன.
இதனையடுத்து, தவிசாளரின் தீர்மானிக்கும் வாக்கைப் பயன்படுத்தி இந்த வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
பெண் உறுப்பினர் வழங்கிய ஆதரவு
குறிப்பாக, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர் ஒருவர் ஆளும் தரப்பின் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த நவம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 14 உறுப்பினர்களும், எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களித்ததால் அது மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

அன்றைய வாக்கெடுப்பின்போது ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சுகவீனம் காரணமாகவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் வேறு காரணத்தாலும் சபைக்குச் சமூகமளிக்கவில்லை.
மொத்தம் 34 ஆசனங்களைக் கொண்ட தனமல்வில பிரதேச சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு 16 ஆசனங்களும், எதிர்க்கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 18 ஆசனங்களும் உள்ளன.
இந்நிலையில், வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறு கடுமையான வாக்குவாதங்களும் சலசலப்புகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri