தரம் 13 மாணவர்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையில் புதிய வாய்ப்பு - வெளியான அறிவிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட தரம் 13 மாணவர்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையில்(CSE) முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
இதனை கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவு உதவி முகாமையாளர் நிரோஷன் விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்படி, மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தை அறிமுகப்படுத்தும் பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
தகுதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 10,000 ரூபாய் பெறுமதியான முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மாணவர்கள் மட்டுமன்றி கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களிடையே பங்குச் சந்தை பற்றிய அறிவையும் நிதிசார் கல்வியறிவையும் வளர்த்து, எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக பார்க்கப்படுகின்றது என்றார்.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri