அமெரிக்க விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் – FAA வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நாடு முழுவதும் விமானப் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டன.
நான்கு மணி
இந்தத் தடை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.
FlightRadar24 தரவுகளின்படி, 4,700க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், 10,000க்கும் அதிகமான விமானங்கள் தாமதமடைந்தன.

பழைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உபகரணங்களில் ஏற்பட்ட அதிகப்படியான தரவுச் சுமையே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வான்பரப்பு
மேலும், இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய சேவைத் தடையுடன் இதற்குத் தொடர்பில்லை என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வேய்ன் முலின் தெரிவித்துள்ளார்.

விமானப் புறப்பாட்டுத் தடை நீக்கப்பட்டுள்ள போதிலும், விமான அட்டவணைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க வான்பரப்பில் இவ்வாறான நாடு தழுவிய விமானப் புறப்பாட்டுத் தடை அறிவிக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri