ஆபத்தான நபரின் கொழும்பிலுள்ள ஆடம்பர சொகுசு மாளிக்கை - அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள, நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்ச சந்தேகநபருக்கு சொந்தமான சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான நவீன வீடொன்றின் பாவனை முடக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வீட்டிற்கு அதன் உரிமையாளர்களோ அல்லது வேறு எவருமோ நுழைய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர சொகுசு மாளிக்கை
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு ஷிரான் பாசிக் இந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டை ஷிரான் பாசிக் ஆரம்பத்தில் தனது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்திருந்தார். இருந்த போதிலும், பின்னர் அதனைத் தனது முதல் மனைவியின் மகளுக்கு மாற்றிக் கொடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டதன் பின்னர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.