மைக்ரோசொஃப்ட் சேவைகளில் தொடரும் பாதிப்பு : நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறால் Teams, Outlook மற்றும் Copilot உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்னஞ்சல் பரிமாற்ற வரிசைகள் இயல்பு நிலையை நெருங்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில பயனர்கள் இடையிடையே சேவைத் தடைகளைச் சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது
Outlook தொடர்பாக 1.3 இலட்சம் முறைப்பாடுகள்
இந்தச் சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்பாடு (Malicious Activity) நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாகியும் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படாதது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 74 நாடுகளில் பயனர்கள் சேவைப் பிரச்சினைகளைப் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் Outlook தொடர்பாக சுமார் 1.3 இலட்சம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவில் தேசிய மருத்துவச் சேவைகள், பொலஸ், பாடசாலைகள் மற்றும் நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரச அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமது அரசாங்கம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இணைந்து பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருவதாகவும், சேவைகளில் ஏற்படும் தடைகளை குறைக்க வலுவான மாற்றுத் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.