கைவிலங்குடன் தப்பிய இளைஞர் மீண்டும் கைது - காதலியின் படுகொலை தொடர்பில் 48 மணிநேர தடுப்புக்காவல்
நுவரெலியா - மாகஸ்தோட்ட பகுதியில் கடந்த 10ஆம் திகதி சுற்றுலா விடுதியில் படுகொலைச் செய்யப்பட்ட 27 வயதுடைய பெண்ணின் காதலனை 48 மணி நேர தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாகஸ்தோட்ட பகுதியில் கடந்த 10ஆம் திகதி சுற்றுலா விடுதியொன்றில் இருந்து 27 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தினத்தில் பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்ததாக கூறப்படும் காதலன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
48 மணிநேர தடுப்புக்காவல்
இதனைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் திகதி, நுவரெலியா பிரதான பேருந்து நிலையம் அருகே இரவு 11:30 மணியளவில் கை விலங்குடன் சுற்றித்திரிந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முதல் கட்ட விசாரணையின் பின்னர் நேற்று(13.11.2026) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொழுது அவரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதி கோரியுள்ளனர்.
இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தில் மதுபோதையில்..
அத்துடன், எதிர்வரும்(15.11.2026) ஆம் திகதி சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்றும், முன்னதாக 27 வயதுடைய பெண் ஒருவரை படுகொலை செய்யப்பட்டு, தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் தானாகவே சரணடைந்த நிலையில், காவலில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்ற தேடப்படும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே நுவரெலியா பிரதான பேருந்து நிலையம் அருகே கை விலங்குடன் மது போதையில் இருந்த பொழுதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர், மறைத்து வைத்திருந்த நஞ்சுப் போத்தல் ஒன்றும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri