திருகோணமலையில் கத்தி முனையில் பணம் கொள்ளையிட்டநபர் கைது!
திருகோணமலை- ஆண்டான்குளம் பகுதியில் வீதியால் சென்ற ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி, அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட நபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(13.11.2026) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, சந்தேகநபரிடமிருந்து 2,130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
இதேவேளை, வீதியால் சென்ற ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி, அவரிடமிருந்து 11,500 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

குறித்த குற்றச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக இரண்டு திறந்த பிடியாணைகளும் இரண்டு திகதி குறிப்பிடப்பட்ட பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (14.11.2026) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.