வடக்கு - வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்பு: பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (14.1.2026) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மின்னல் தாக்கம்
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனிமூட்டமான வானிலை
அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
வானிலை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.