அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு.. அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்
புதிய இணைப்பு
அனைத்து வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களையும் பாதித்த ஒரு தகவல் தொடர்பு சிக்கலைத் தொடர்ந்து, அனைத்து அமெரிக்க விமான நிலையங்களுக்கும் நாடு தழுவிய தரைவழிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ஷான் டஃபி அறிவிததுள்ளார்.
முதலாம் இணைப்பு
அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு (Nationwide Ground Stop) அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
"அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக" அமெரிக்காவிலுள்ள அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், புறப்படவிருந்த விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FAA இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அவசர எச்சரிக்கை பின்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எத்தனை விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
