கிண்ணியாவில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(13.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இதன்போது, கிண்ணியா சூரங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், கிண்ணியா எழிலரங்கு வீதியைச் சேர்ந்த மற்றுமொருவரிடமிருந்து 3,110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (14) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri