யாழி்ல் 6இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மருத்துவ முகாம் நிகழ்வை நேற்று(14.11.2026) பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கருடன் அதிதியாக கலந்து சிறப்பித்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தபின் இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
40 சதவீதம் வரையான அதிகரிப்பு
நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், எமது சமூகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இது ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோயாக இருப்பதால், 'மௌனக் கொல்லி'யாக உருவெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் நீரிழிவு நோயின் பரவல் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 3 முதல் நான்கு வீதமாக இருந்த இந்நோய் தற்போது 30 முதல் 40 சதவீதம் வரையான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கு
அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுமார் ஆறு இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல.
அதேவேளை, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை மக்களுக்கு வழங்குவதுடன் நின்றுவிடாமல், மக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்






