ஜனாதிபதி அநுரவின் உடனடி உத்தரவு! மீளப்பெறப்படும் மெய்ப்பாதுகாவலர்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் உத்தரவு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த மெய்ப் பாதுகாவலர்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவலர்கள் தவிர, இதர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல் News Lankasri