திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொலை! விசாரணையில் வெளியான தகவல்கள்
திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, குறித்த முகாமில் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த முகாமில் 600 இற்கும் மேற்பட்டோர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சில கடற்படை அதிகாரிகளிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.