மின்னேரியாவில் வாகன விபத்து: பலரின் நிலை கவலைக்கிடம்
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலரின் நிலை கவலைக்கிடம்
மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
