சுற்றுலா ஓட்டுநர் உரிமத் திட்டம்! கடுமையாக சாடும் நாமல்
சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
வழிகாட்டுதல் மற்றும் போக்குவரத்து சேவைகளை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் கீழ் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களை அங்கீகரித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அத்தகைய உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The government’s proposal to issue driving licenses to tourists upon their arrival has raised questions as to how they reached such a decision without consulting all the stakeholders. Sri Lanka’s tourism industry consists of thousands of tour guides & taxi operators as well who…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 11, 2025
நாடு முழுவதும் சமீபத்தில் மேற்கொண்ட பயணங்களின் போது, சுற்றுலாத்துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சும் ஒரு நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பு பரந்த ஆலோசனைகளை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தொழில்துறை ஊழியர்களிடமிருந்து ஏராளமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
