தென்னிந்திய நடிகர்களை விடவும் ஜனாதிபதி நன்றாக நடிக்கின்றார்
தென்னிந்திய நடிகர்களை விடவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடிக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நுவரெலியா விஜயம்
நேற்றைய தினம் ஜனாதிபதி நுவரெலியா விஜயம் செய்தமை தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டிருந்தது.

குறிப்பாக தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்களை அவர் நேரடியாக தேயிலை தோட்டத்தில் சென்று சந்தித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்ககை தொடர்பில் ஊடகங்கள் எஸ்.எம். மரிக்காரிடம் கேள்வி எழுப்பியிருந்தன.
சாப்பிடும் காட்சிகள்
இதன் போது ஜனாதிபதி அநுரகுமாரவின் நடிப்பிற்கு தென்னிந்திய நடிகர்களினால் கூட ஈடுகொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒரேயொரு விடயத்தை மட்டும் மறந்து விட்டார் எனவும் பெருந்தோட்ட லயன் அறை ஒன்றுக்குச் சென்று சாப்பிடும் காட்சிகள் மட்டும் எடுக்கப்படவில்லை என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.