கொழும்பு பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர் : மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்....
கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான புல்டோசர் ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இயந்திரம் சுவரில் மோதிய வேகத்தில் சுவர் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலை விளையாட்டு மைதானத்தில்
காயமடைந்த மாணவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் 16 வயதுடையவர்கள் என்றும் விபத்து நடந்தபோது அவர்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புல்டோசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.