யாழில் கோர விபத்து..! ஒருவர் பலி - மூவர் படுகாயம்
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(10) பதிவாகியுள்ளதுடன், நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணை
கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த காரும் யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர்,கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
