இலங்கையில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலவும் கடுமையான வரட்சியான காலநிலை மற்றும் நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.ஏ. சிரிவர்தன ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மரக்கறித் தொகை
அதற்கமைய, அண்மைய நாட்களில் மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் நாளாந்த மரக்கறி சுமார் 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளது.

முன்னர் நாளாந்தம் கிடைக்கப்பெற்ற 600,000 கிலோகிராம் மரக்கறித் தொகை தற்போது 400,000 கிலோகிராம்களாக குறைந்துள்ளது.
இந்த நிலைமையால் சந்தையில் ஒரு கிலோ கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ கரட் 230 முதல் 250 ரூபாய் வரையான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ முருங்கை 150 முதல் 200 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ பூசணிக்காய் 115 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தீவிரமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் மரக்கறி பயிரிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பணம் புழங்கும் திறன்
எனினும், மக்களிடம் பணம் புழங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கேனும் பணம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு மரக்கறி விலைகள் உடனடியாக மேலும் அதிகரிக்க முடியாமல் போனது.
எனினும் மரக்கறிகளுக்கான மேலதிக கையிருப்புகளைப் பேண முடியாத நிலை காணப்படுவதால், எதிர்காலத்தில் இந்நிலை கடுமையான மரக்கறி நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam