ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.
கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணை ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை