நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை
தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவிற்கு கார் சாரதியாகக் கூட இருப்பேன்” என மேடையில் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, காணி சுவீகரிப்பு , காணால் ஆக்கப்பட்டோர் போன்ற தமிழர்களின் வரலாற்றில் மோசமான நிலையை ஏற்படுத்தியவர்களாக கருதப்படும் ராஜபக்சர்களைப் போற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா செயற்படுகிறார்.
இந்த செயற்பாடு, தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் போராடி வரும் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் தமிழ் மக்களுக்கான நீதி எவ்வளவு காலம் கடந்தாலும் கிடைக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல வருடங்கள் கடந்தும் தங்களது உறவுகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். எனினும், இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மக்களுக்காக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு, சுயலாபம் அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பல்வேறு விடயங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவருகிறது அதிர்வு நிகழ்ச்சி.