அர்ச்சுனா பேச்சுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு - ராஜபக்சர்களுக்கு சவால்..!
இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரசன்னப்படுத்தும் வகையில் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியது கண்டிக்கத்தக்கது என ஒருமித்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அர்ச்சுனா இவ்வாறு மோசமாகப் பேசியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்தார்.
அநுர அரசாங்கம் 2029ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாமல் ராஜபக்சதான் ஆட்சிப் பீடம் ஏறுவார் என்றார்கள்.