வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - களனி கங்கையின் ஆற்றுப்படுகையை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்பு
இதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan