மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பாதுகாப்புப்படை உறுப்பினரொருவர் கைது
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினர்
எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri