மிகுந்த மகிழ்ச்சியில் மைத்திரி..! நீதிமன்றில் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்து
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மகிழ்ச்சியில் இருவர்..
இத்தண்டனை தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ,
"நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri