பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு

Anura Kumara Dissanayaka Easter Attack Sri Lanka Rajapaksa Family Sri Lanka Government National People's Power - NPP
By Benat Jul 31, 2026 07:31 PM GMT
Report

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான  நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும்  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.07.2026) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட மிக மிலேச்சத்தனமாக கொடூர தாக்குதல் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல். 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை

அரசியல் மாற்றத்திற்கான தாக்குதல்

ஆரம்பத்தில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளடைவில் இது இலங்கையின் ஒரு சாராரின் அரசியல் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதம் வலுப்பெற்றது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி இடைநடுவே கவிழ்ந்து போக அடுத்ததாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 

பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு | The First Sentence Of The Easter Sunday Attack

இப்படி வந்த அரசாங்கங்களிடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையான  சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த ஆட்சிகளின் போது இது தொடர்பான விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன. 

எனினும், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்திடமும் இதே கோரிக்கையை மக்கள் முன்வைத்ததோடு, அநுர தரப்பும் இது தொடர்பில் மிகத் தீவிரமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்  தொடர்பான விசாரணைகளை அநுர அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது.  

இதன் தொடர்ச்சியாக,  முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மிக முக்கியத் தலைகளின் பெயர்கள் வெளிவந்தன.

அம்பலத்தப்படுத்தப்பட்ட சூத்திரதாரிகள் 

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள்  பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது அரசாங்கம்.  

இதில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏலவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது. 

பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு | The First Sentence Of The Easter Sunday Attack

இதனைத் தொடர்ந்து, ராஜபக்ச விசுவாசிகளான தென்னிலங்கையின் காலாவதியான பல அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும்  போராடியும் ஓய்ந்து போயினர்.  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பயணத் தடையின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. 

எனினும், விசாரணைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அநுர அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்ததுடன், தொடர் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. 

இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்

இப்படியான நிலையில் தான்,  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 7 வருடங்களின் பின்னர் இன்று அவருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக அடுத்து கைது செய்யப்படப் போகின்ற, தண்டனை விதிக்கப்படப்போகின்ற முக்கிய புள்ளிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதேசமயம், அண்மையில்,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தின் பின்னர் ஒரு சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு | The First Sentence Of The Easter Sunday Attack

குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. 

அந்தக்கூட்டத்தில், சுரேஷ் சலே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைப்பது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆசாத் மௌலானா வெளியிட்ட  தகவல்

இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகள் என்பதோடு,  சுரேஷ் சலே,  கோட்டாபய ராஜபக்ச நினைப்பதை மாத்திரம் செய்யக்கூடிய ஒருவராக இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையிலான  நெருக்கம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு கட்டளையிட்டால் அதற்கு மறுப்பேச்சின்றி சுரேஷ் சலே அந்தக் கட்டளையை செய்து முடிப்பார் என சரத் பொன்சேகா  குறிப்பிட்டிருந்தார்.

பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு | The First Sentence Of The Easter Sunday Attack

அது மாத்திரமல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு பிரதானமாக தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வந்தவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்.

இதன்போது, பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஆசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தார்.  

அதனடிப்படையில், ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஆசாத் மௌலானாவைத் தேடிச் சென்ற இலங்கை  குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம்  விசாரணைகளை மேற்கொண்டதிலும், ராஜபக்ச குடும்பத்திற்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த பல தகவல்கள் வெளியாகியிருந்தன. 

நடுக்கத்தில் ராஜபக்சர்கள்

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்  நடந்து முடிந்த பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை,   முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும்,  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்  பிள்ளையானை விடுவிப்பது தொடர்பான உத்தரவாதம் ஒன்றை அவரிடம் வழங்கிவிட்டு வந்ததாகவும் ஆசாத் மௌலானாவிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்தன.

பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு | The First Sentence Of The Easter Sunday Attack

இப்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளின் முடிவுகளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்த்தாலும் அது ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கின்றது.

இழந்த ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்தி, மக்களின் உயிரைக் கேடயமாக வைத்து ஆட்சியைப் பிடித்ததாக  கோட்டாபய ராஜபக்ச தரப்பு மீது அரசியல்வாதிகளும், மக்களும் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். 

இந்த விசாரணைகளின் தொடர்ச்சி ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கும் நிலையில்,  அடுத்து கைது செய்யப்படப் போவது யார்? என்ற கேள்வி எழுகின்றது.  பொறுத்திருந்து பார்க்கலாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகள் யார்..?? ராஜபக்சர்கள் தப்புவார்களா..??  அடுத்தடுத்த தண்டனைகள் உறுதியாகுமா என்பதை.. 

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்

காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 31 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US